உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / லெப். ஜெனரல் கரன்பீர் சிங் துவக்கி வைப்பு | Artificial leaf runway opening | wellington | coonoor

லெப். ஜெனரல் கரன்பீர் சிங் துவக்கி வைப்பு | Artificial leaf runway opening | wellington | coonoor

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கட்டுப்பாட்டில் தங்கராஜ் நினைவு மைதானம் உள்ளது. இங்கு ராணுவ தடகள வளர்ச்சி பிரிவு சார்பில் 6 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் மைதானம் சர்வதேச தரத்தில் அமைக்கும் பணிகள் கடந்த 6 மாத காலமாக நடந்தது. இதன் துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தென் பிராந்திய மைய ஜெனரல் கமாண்டிங் அலுவலர் லெப். ஜெனரல் கரன்பீர் சிங் பங்கேற்று துவக்கி வைத்தார். தடகள மாணவர் ஒருவரை அழைத்து ரிப்பன் வெட்ட வைத்தார். பணிகளின் திட்ட அலுவலராக இருந்து செயல்படுத்திய எம்.ஆர்.சி. உடற்கல்வி பயிற்சி அலுவலர் மேஜர் சச்சின் சிங் குந்தல், பொறியாளர் சதீஷ் ஆகியோர் செயற்கை இழை மைதானம் குறித்து விளக்கம் அளித்தனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மைய கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் கூறுகையில், நீலகிரி மாவட்டத்திலேயே முதல் 8 லைன் கொண்ட செயற்கை இழை மைதானம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ராணுவ வீரர்களுக்கு சிறந்த தடகள பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும், என்றார். எம்.ஆர்.சி., ராணுவ தடகள வீரர்கள் வென்ற கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் மைதான சிறப்புகள் குறித்து காட்சிபடுத்தப்பட்டது.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை