உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பஸ் டெப்போ முன் தரையில் அமர்ந்து தர்ணா | Ask for bus facility | People's dharna | coonoor

பஸ் டெப்போ முன் தரையில் அமர்ந்து தர்ணா | Ask for bus facility | People's dharna | coonoor

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பால் மராலீஸ் பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சை நம்பி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளனர். கடந்த 20 நாட்களாக காலை 9 மணிக்கு இயக்கப்பட்ட பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இது குறித்து புகார் தெரிவித்தும் தீர்வு காணவில்லை. இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் வினோத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா இடை கமிட்டி செயலாளர் இளங்கோ தலைமையில் பொதுமக்கள் பஸ் டெப்போ வந்தனர். அங்கு போக்குவரத்து மேலாளர் இல்லாத நிலையில் பஸ் விடக்கோரி டெப்போ முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மக்கள் கூறுகையில், காலை நேரத்தில் இயங்கி வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. தொழிலாளர்களும் பணிக்கு நடந்தே செல்கின்றனர். இப்பகுதி மகளிருக்கான விடியல் பயணமும் இல்லை. பணம் செலுத்தி பஸ்சில் பயணம் செய்த அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. என்றனர். டெப்போ வந்த மற்ற அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் 27ம் தேதியில் இருந்து பஸ் இயக்க உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ