உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ட்ரோன் உதவியுடன் கடுமையான பாறைகள் சர்வே | Landslide | Barliyar Hill Road Damage | Restoration Work

ட்ரோன் உதவியுடன் கடுமையான பாறைகள் சர்வே | Landslide | Barliyar Hill Road Damage | Restoration Work

ட்ரோன் உதவியுடன் கடுமையான பாறைகள் சர்வே | Landslide | Barliyar Hill Road Damage | Restoration Work Intensifies | Coonoor | Nilgiris நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை பர்லியார் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அரசு பஸ் மீது பாறை விழுந்ததில் டிரைவர் பலியானார். இப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றது. பர்லியார் மலைவழிச்சாலையில் அபாய பாறைகள் மற்றும் மண் அகற்றி விரிவாக்கம் செய்யும் பணிகள் துரிதமாக நடக்கிறது. இப்பணிகள் டில்லியில் உள்ள மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதியுடன் நடக்கிறது. 5 மீட்டர் அகல சாலையில் கூடுதலாக 3 மீட்டர் அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றது. விரிவாக்க இடத்தில் பெரிய அளவிலான அபாயகரமான பாறைகள் உள்ளன. அவற்றை அகற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புவியியல் துறையினர் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கை தயார் செய்ய ட்ரோன் சர்வே எடுக்கும் பணிகள் நடக்கிறது. நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், பொக்லைன் உதவியுடன் கம்ப்ரசர் கொண்டு ராட்சஷ பாறைகள் அகற்றப்படுகின்றன. விரிவாக்கம் செய்த இடத்தில் தார் ஊற்றி சீரமைக்கப்படும். உயரதிகாரிகள் ஆய்வுக்கு பின் வாகன போக்குவரத்துக்கு திறக்கப்படும். தாழ்வான இடத்தில் இரும்பு தடுப்பு கம்பி அமைக்கப்படும் என்றனர்.

நவ 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ