உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஜீன்பூல் தாவர மையத்தில் பராமரிப்பு | bird rescue cuddalore

ஜீன்பூல் தாவர மையத்தில் பராமரிப்பு | bird rescue cuddalore

ஜீன்பூல் தாவர மையத்தில் பராமரிப்பு / bird rescue cuddalore நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிக்கோடு சாலை, மரப்பாலம் பகுதியில் நேற்று, காலை தாயை பிரிந்து இருவாச்சி பறவையின் குஞ்சு புளியம்பாறை சாலையில் தனியாக தவித்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த அப்பகுதியினர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததுடன், அப்பகுதியில் உலா வந்த குரங்கு மற்றும் தெருநாய்கள் அதன் அருகே செல்லாத வகையில் பாதுகாத்தனர். அதிகாரிகள் உத்தரவுப்படி வேட்டை தடுப்பு காவலர் வாசுதேவன், இருவாச்சி குஞ்சை பத்திரமாக மீட்டு எடுத்து சென்றனர். வனத்துறையினர் கூறுகையில், மீட்கப்பட்ட இருவாச்சி பறவையின் குஞ்சு, நல்ல நிலையில் உள்ளது. அதனை எடுத்துச் சென்று, ஜீன்புல் வனப்பகுதியில் விடுவித்தோம் என்றார்.

மே 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை