மக்கள் சந்தித்து மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
மக்கள் சந்தித்து மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு | Nilgiris | Promotion by drawing the lotus symbol நீலகிரி மாவட்டத்தில் பா.ஜ சார்பில் மக்கள் சந்திப்பு ஆய்வு கூட்டம் நடத்தி ஜல் ஜீவன் ஹாவாஸ் யோஜ்னா உட்பட மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில் 100 தாமரை சின்னம் சுவர்களில் வரைந்து பிரசாரத்தை துவக்கியுள்ளனர். பிரச்சாரத்திற்கு பா.ஜ விவசாய பிரிவு மாநில தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். பா.ஜ மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், மண்டல தலைவர் சரவணன், மண்டல பொது செயலாளர் பத்மநாபன், உட்பட பாஜவினர் பங்கேற்றனர். ஒவ்வொரு கிராமங்களிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.