உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஆட்டம் போட்ட புல்லட் யானைக்கு முடிவு | Bullet Elephant Attrasity | Pandalur

ஆட்டம் போட்ட புல்லட் யானைக்கு முடிவு | Bullet Elephant Attrasity | Pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் புல்லட் என்ற காட்டு யானை மக்களை அச்சுறுத்தி வருகிறது. உணவு தேடி இதுவரை 35க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியதுடன் மனித உயிர்களையும் காவு வாங்கியது. இன்று அதிகாலை காவயல் டான் டீ குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த புல்லட் யானை உணவு தேடி சிம்பு என்பவர் வீட்டின் ஜன்னலுக்குள் தலையை நுழைக்க முற்பட்டது. இதனால் ஜன்னல் பெயர்ந்து விழுந்தது. சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த சிம்பு அதிர்ச்சியடைந்தார். கர்ப்பிணி மனைவி மற்றும் குழந்தையுடன் பின்பக்க வழியில் தப்பிச் சென்று பக்கத்து வீட்டில் தஞ்சம் அடைந்தார். சிம்பு வீட்டில் சாப்பிட எதும் கிடைக்காததால் அருகில் இருக்கும் ஞானசேகர் என்பவரின் வீட்டையும் இடித்து தள்ளி உணவு தேடியது. தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானையை டார்ச் லைட் அடித்தும், ஹாரன் எழுப்பியும் விரட்டினர். அங்கிருந்து தப்பி ஓடிய யானை தேயிலை தோட்டத்துக்குள் தஞ்சம் அடைந்தது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு கிடைத்துள்ளது. யானையை பிடிக்கும் பணி துவங்கியுள்ளதாக கூறினார். அதை தொடர்ந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். தற்போது யானை சாமியார் மலையில் முகாமிட்டுள்ளதால் அதனை சமதளமான பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை