உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பயிர் சேதத்தை கணக்கிட்டு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தல் | Nilgiris | government to calculate crop

பயிர் சேதத்தை கணக்கிட்டு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தல் | Nilgiris | government to calculate crop

பயிர் சேதத்தை கணக்கிட்டு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தல் | Nilgiris | government to calculate crop damage and provide relief நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இரவு முதல் பாடந்துறை, குச்சிமுச்சி, செறுமுள்ளி, மன்மையில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாடந்தூறை, ஆலவயல், குச்சுமுச்சி ஆறுகளில் அதிகாலை ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு, ரோடுகள், விவசாயி தோட்டங்களை சூழ்ந்தது. குச்சிமுச்சி சாலையில் உள்ள பாலம், மழை வெள்ளத்தில் மூழ்கியதால் கல்லிங்கரை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆகினர். கம்மாத்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாய தோட்டங்கள், கிறிஸ்தவ சபை மற்றும் வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. வீட்டில், சிக்கி தவித்த ஒருவரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் இருவயல் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி, வருவாய் அலுவலர்கள் கல்பனா, ரேகா, வி.எ.ஓ., நாசர் ஆகியோர் 10 வீடுகளில் சிக்கிய 47 பேரை கூடலூர் தீயணைப்பு துறையினர் மூலம் மீட்டனர். தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிட பள்ளியில் உள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டனர். தேவன் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கும் பணி நடக்கிறது. ஆறுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம் குடியிருப்பு, விவசாயிகள் தோட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ