பழுதடைந்த குடவுனுக்கு புதிய கட்டடம் கட்டும் பணி Nilgiris | Construction of Civil Supply Gutton
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள சிவில் சப்ளை குடோன் பழுதடைந்ததால் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக பந்தலூரில் இருந்து இரும்பு பாலம் கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் வருவாய் துறைக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்த தேயிலை செடிகள் மற்றும் கட்டுமானங்களை அகற்றும் பணி துவங்கியது. பணிகளை கூடலூர் ஆர்.டி.ஓ செந்தில்குமார், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் குணசேகரன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி தலைவர் சிவகாமி, துணை தலைவர், நாகராஜன் கவுன்சிலர்கள் சாந்தி மற்றும் முரளி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். கட்டுமான பணி விரைவில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.