துாய்மை பணியாளர்கள் உணவு தரமில்லை என கவுன்சில் கூட்டத்தில் தெரிவிப்பு
துாய்மை பணியாளர்கள் உணவு தரமில்லை என கவுன்சில் கூட்டத்தில் தெரிவிப்பு | Sanitation workers report substandard food | council meeting | Udumalpet | Tiruppur திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக் கூட்டம் தலைவர் மத்தீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள் சிலர் உடுமலை நகராட்சி துாய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமற்றும், மீதமான உணவுகளை வழங்குவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். உடுமலை நகராட்சியில் பணியாற்றும் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த துாய்மைப்பணியாளர்கள், பள்ளி துாய்மைப்பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என, 241 பேருக்கு, 1.45 கோடி ரூபாய் செலவில், காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் துாய்மைப்பணியாளர், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என 241 பேருக்கு 1 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்ப்டடுள்ளது. ஒப்பந்த நிறுவனம் வழங்கிய மெனு படி வழங்காமல், பழைய சோறு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் மற்றும் உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி அதிருப்தி தெரிவித்தார். பெரும்பாலான துாய்மைப்பணியாளர்கள் காலை உணவை வாங்குவதில்லை. அரசு செயல்படுத்திய அருமையான திட்டத்தை கேள்விக்குறியாக்கும் வகையில், தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என குற்றம் சாட்டினர். மேலும் உடுமலையில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு பழநி ஒப்பந்த நிறுவனத்தில் இருந்து உணவு வருவதை நிறுத்தி, உடுமலையிலேயே தயாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் விநாயகம் , ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பழநியில் காலை உணவு தயாரிப்பது நிறுத்தப்பட்டு தரமாக வழங்கவும், சூடாக ஹாட் பாக்சில் வழங்கவும், உடுமலையிலேயே உணவு தயாரிக்க அறிவுறுத்தப்படும், என பதிலளித்தார்.