நோய் தாக்கி இறந்ததா என வனத்துறை விசாரணை | cub leopard death | forest department enquiry | pandalur
நோய் தாக்கி இறந்ததா என வனத்துறை விசாரணை / cub leopard death / forest department enquiry / pandalur நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. அங்குள்ள குடிநீர் தொட்டி பகுதியில் சிறுத்தைக் குட்டி ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஸ்பாட்டிற்கு விரைந்த வனவர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வனக்குழு விசாரணை மேற்கொண்டது. கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவக்குழு சிறுத்தைக் குட்டியை பிரேத பரிசோதனை செய்தனர். உயிரிழந்தது 8 மாத பெண் சிறுத்தைக் குட்டி, நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிய வந்தது. அதே இடத்தில் ஏற்கனவே சிறுத்தை ஒன்று காயங்களுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.