உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கூடலூர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை | nilgris | Cuddalore Police investigating fire inciden

கூடலூர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை | nilgris | Cuddalore Police investigating fire inciden

நீலகிரி மாவட்டம் கூடலூரில் செருப்பு கடையின் மேல்மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ அருகேயுள்ள, துணிக்கடைக்கும் பரவியது. கூடலூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். கடை ஊழியர்கள் வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தீ விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் போலீசார் போக்குவரத்து சீரமைக்கு பணியில் ஈடுபட்டனர். தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !