உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சட்டவிரோதமாக மரம் வெட்டுவதால் அதிகரிக்கும் ஆபத்து

சட்டவிரோதமாக மரம் வெட்டுவதால் அதிகரிக்கும் ஆபத்து

சட்டவிரோதமாக மரம் வெட்டுவதால் அதிகரிக்கும் ஆபத்து/ Deforestation/ Wild life threat/ Human wildlife conflict/ coonoor ஊட்டி குன்னூர் மலைப்பாதை முக்கியமான யானை வழித்தடம். அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். இதனால் அப்பகுதியில் பொக்லைன் பயன்பாடு மற்றும் பாறை உடைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிகளை மீறி, குரும்பாடி அருகே மலையை குடைந்து இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. பாதுகாப்பு பட்டியலில் உள்ள பலா உட்பட பல காட்டு மரங்களை வெட்டி, மூடப்பட்ட லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. காடுகள் அழிக்கப்படுவதால் யானைகள் வழித்தடம் மாறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. நேற்று இரவு ஆடர்லி பகுதியில் நடந்து சென்ற விஜயகுமார் என்பவரை காட்டு யானை தாக்கியது. இதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வனத்துறையினர் உடலை மீட்டு அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த விஜயகுமாரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. யானை வழித்தடங்கள் அழிக்கப்படுவதால் மலை கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் வனவிலங்கு மனித மோதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. யானை வழித்தடங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !