உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நெல்லியாளம் நகராட்சி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

நெல்லியாளம் நகராட்சி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

நெல்லியாளம் நகராட்சி திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு | DMK councillors resolution condemning DMK municipal president | Nellialam municipality நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சியில் நகரமன்றத் தலைவராக இருப்பவர் பழங்குடியை சேர்ந்த சிவகாமி. துணை தலைவராக இருப்பவர் நாகராஜ். இருவரும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். பொறுப்பேற்றது முதல் நகராட்சியில் அடிக்கடி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே நாளுக்கு நாள் புகைச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நகர்மன்றக் கூட்டம் தலைவர் சிவகாமி தலைமையில் இன்று நடைபெற்றது. திமுகவை சேர்ந்த கவுன்சிலர் ஆலன் எழுந்து தீர்மானம் ஒன்றை வாசித்தார். அதில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் இணைந்து நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடையாக இருக்கின்றனர். நிதி முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என குற்றம் சுமத்தினார். கவுன்சிலர் ஆலனுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் நகர்மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை