உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சிறுத்தைக்கு பயந்து வீட்டிற்குள் முடங்கிய கிராம மக்கள் | Leopard Attack

சிறுத்தைக்கு பயந்து வீட்டிற்குள் முடங்கிய கிராம மக்கள் | Leopard Attack

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ள சிறுத்தை வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு பழங்குடியின பெண்கள் உள்ளிட்ட மூன்று பெண்களை தாக்கியது. அதில் சரிதா என்ற பழங்குடியின பெண் இறந்தார். சிறுத்தையை பிடிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் வியாழன் இரவு 7 மணிக்கு கொளப்பள்ளி அருகே சேவியர் மட்டம் என்ற இடத்தில் வீட்டிற்கு வெளியே தாயுடன் வந்த கீர்த்தனா என்ற நான்கு வயது குழந்தையை சிறுத்தை தாக்கியது. சுதாரித்துக் கொண்ட குழந்தையின் தாயார் குழந்தையை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி உயிர் தப்பித்தார். காயமடைந்த குழந்தையை பந்தலூர் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். பொதுமக்களை சிறுத்தை தாக்கி வருவதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கும் நிலையில் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ