உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தேயிலை தோட்டத்தில் பதுங்கிய சிறுத்தையை ட்ரோன் மூலம் தேடும் வனத்துறை | Leopard Attack

தேயிலை தோட்டத்தில் பதுங்கிய சிறுத்தையை ட்ரோன் மூலம் தேடும் வனத்துறை | Leopard Attack

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சிறுத்தை ஒன்று முகாமிட்டுள்ளது. வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வருவதுடன் மனிதர்களையும் தாக்கி வருகிறது. கடந்த 4ம் தேதி வீட்டின் முன் குழந்தையை சிறுத்தை தாக்கியது. படுகாயமடைந்த குழந்தையை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். இதையடுத்து சிறுத்தையை சுட்டுப்பிடிக்க அல்லது மயக்க ஊசி போட்டு பிடிக்கும்படி கடைகளை அடைத்து கொளப்பள்ளி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக டாக்டர் ராஜேஷ்குமார், சத்தியமங்கலம் புலியூர் காப்பக டாக்டர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர், கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் மேற்பார்வையில் 70 க்கும் மேற்பட்ட வனக்குழு இணைந்து சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜன 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ