/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ செந்நாய்கள் குட்டி ஈன்றதால் வாகனங்கள் செல்ல தடை விதிப்பு | Control of vehicles
செந்நாய்கள் குட்டி ஈன்றதால் வாகனங்கள் செல்ல தடை விதிப்பு | Control of vehicles
நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி பகுதியில் 200க்கும் மேற்பட்ட டூரிஸ்ட் வாகனங்கள் இயக்கப்படுகிறது. விபூதிமலைக்கு செல்லும் வழியில் செந்நாய் குட்டிகள் ஈன்றுள்ளது. இதனால் அப்பகுதியில் டூரிஸ்ட் வாகனங்களை இயக்க வனத்துறை தற்காலிக தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டூரிஸ்ட் வாகன ஓட்டுனர்கள் மசனகுடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் மறியலை கைவிட்டு மசினகுடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஜன 06, 2024