/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்படும் சிறுத்தை | The leopard was caught
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்படும் சிறுத்தை | The leopard was caught
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டிருந்த சிறுத்தை வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில் மனிதர்களையும் தாக்கி வந்தது. சிறுத்தை தாக்கியதில் சரிதா என்ற பழங்குடியின பெண் பலியானார். மேலும் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். சனிக்கிழமை மாலை பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் அங்கன்வாடிக்கு சென்று விட்டு தனது தாயாருடன் திரும்பிய வட மாநில தொழிலாளி சிவசங்கர் கிர்வார் என்பவரின் மூன்று வயது குழந்தையை சிறுத்தை கவ்விப் பிடித்து துாக்கி சென்றபோது குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஜன 07, 2024