உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / காட்டு யானை - மனித மோதலை தடுக்க வனத்துறை நடவடிக்கை

காட்டு யானை - மனித மோதலை தடுக்க வனத்துறை நடவடிக்கை

காட்டு யானை - மனித மோதலை தடுக்க வனத்துறை நடவடிக்கை | drives away wild elephants | night vision drone camera | gudalur நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்கள், வீடுகளை செய்தப்படுத்தி வருகிறது. அவ்வப்போது மனிதர்களை தாக்குகிறது. இதைத் தடுக்கவும், யானை மனித மோதல் தவிர்க்கவும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களில் வன ஊழியர்கள் வாகனங்களில் ரோந்து பணிகள் மேற்கொண்டு காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுத்து விரட்டி வருகின்றனர். ஓவேலி வனச்சரகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்க கூடிய ஐந்து கேமராக்கள் வைத்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து விரட்டி வருகின்றனர். எனினும் இப்பிரச்சனையை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கின்றனர். ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட புதிய தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய நைட் விஷன் ட்ரோன் கேமரா பயன்படுத்தி வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியை சில நாட்களுக்கு முன் சோதனை முறையில் மேற்கொண்டனர். இதில் நல்ல பலன் கிடைத்ததை தொடர்ந்து, இம்முறையை பயன்படுத்த வனத்துறையினர் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு கூறுகையில், கூடலூரில் மனித - வனவிலங்கு மோதலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். காட்டு யானைகள், இரவில் கண்காணித்து விரட்டுவதில் ஏற்பட்டுள்ள சிரமம் உள்ளது. இதனை தவிர்க்க, நைட் விஷன் டிரோன் கேமரா பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் நைட் விஷன் ட்ரோன் கேமராவை சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அதன் மூலம் இரவில் யானைகள் கண்காணித்து விரட்டுவதில் உள்ள சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும். மனித- விலங்கு மோதலை வெகுவாக தடுக்க முடியும் என்றார்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ