உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / எங்க ஓட்டு உங்களுக்கு வேணும்; எங்களுக்கு குடிக்கக்கூட தண்ணி தரமாட்டீங்க? | Election Boycott

எங்க ஓட்டு உங்களுக்கு வேணும்; எங்களுக்கு குடிக்கக்கூட தண்ணி தரமாட்டீங்க? | Election Boycott

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மூச்சுகுன்னு கிராமம். இங்கு 52 குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இங்கில்லை. அவசர தேவைகளுக்கு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி வர வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம். இதனால் நடந்து செல்வதிலும் சிரமம் தான். இங்குள்ள மக்கள் சோலார் மின் வசதியை பயன்படுத்தி வரும் நிலையில் மழைக் காலங்களில் அதற்கும் வழியில்லை. இதுகுறித்து அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் கிராம மக்கள் பலமுறை வலியுறுத்தியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. கடுப்படைந்த மக்கள் தங்கள் கிராமத்திற்கு ஓட்டு கேட்டு யாரும் வர வேண்டாம் எனக் கூறி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ