உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை குடியிருப்பு அருகே ஒற்றை காட்டு யானை முகாம்

நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை குடியிருப்பு அருகே ஒற்றை காட்டு யானை முகாம்

நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை குடியிருப்பு அருகே ஒற்றை காட்டு யானை முகாம் / Elephant entry / forest department alert / pandalur நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் சமீப காலமாக யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக பி.டி.12 என்று அழைக்கப்படும் ஆண் யானை, பஜார் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய சாலையில் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதுவரை சாலையில் நிறுத்தியிருந்த ஆறு வாகனங்களை தாக்கி சேதப்படுத்தி உள்ளது. இதனால் இந்த யானையை வேறு பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆப்பிரிக்காவில் இருந்து ரேடியோ காலர் வரவழைக்கப்பட்டது. நான்கு நாட்களாக வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்த இந்த யானை நேற்று காலை 6.30 மணிக்கு போலீஸ் நிலைய வளாகம் வழியாக சாலைக்கு வந்து சாலையில் ஒய்யாரமாக வாக்கிங் சென்றது. யானை வருவதை பார்த்த வாக்கிங் சென்றவர்கள் உயிர் பயத்தில் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். . சாலையில் நடந்து சென்ற யானை வழக்கமாக வனப்பகுதிக்குச் செல்லும் பாதை வழியாக இறங்கி குடியிருப்புகளுக்கு அருகே உள்ள முதற்பகுதியில் முகாமிட்டது. இதனால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ