உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வருவாய், பத்திரப்பதிவு அதிகாரிகள் உடந்தை? | Farmers Protest

வருவாய், பத்திரப்பதிவு அதிகாரிகள் உடந்தை? | Farmers Protest

நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்களிடம் தனி பட்டா இல்லாமல் கூட்டு பட்டா மட்டுமே உள்ளது. இதனால் ஆவணங்கள் இல்லாமல் சமூக வழக்கப்படி பாகப் பிரிவினை செய்து ஒரே சர்வே எண்ணில் தனித் தனியாக தேயிலை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக தேயிலை தோட்டங்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு கைமாற்றப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குன்னூர் எடப்பள்ளி இளித்தொரை கிராம மக்களின் நிலம் புரோக்கர்கள் மூலம் சென்னை தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் வருவாய்துறை மற்றும் பதிவுத்துறை உடந்தையுடன் 17 ஏக்கர் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்துள்ளதாக தேயிலை விவசாயிகள் குற்றம் சுமத்தினர். நிலத்தை மீட்கும் முயற்சியாக நூற்றுக் கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு நடுஹட்டி கிராமத்திற்கு சென்றனர். அங்கு ரியல் எஸ்டேட்டாக மாற்றிய இடத்தில் இருந்த வேலி மற்றும் தகர ஷெட்களை விவசாயிகள் அகற்றினர். அங்கு பசுந்தேயிலையை பறித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இது தொடர்பாக ஊர் தலைவர் சேகர் கூறுகையில், நாங்கள் பூர்வீகமாக தேயிலை தோட்டங்களை அனுபவித்து வரும் நிலங்களை சில புரோக்கர்கள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் இனி தொடர்ந்து பசுந்தேயிலையை எடுக்க உள்ளனர். விநாயகர் கோயிலுக்கு ஒருவர் அரை ஏக்கர் உயில் சாசனம் எழுதிக் கொடுத்த நிலமும் தனியார் நிறுவனம் சப் டிவிஷன் செய்துள்ளது. உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே நிலங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும், என்றார்.

மார் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை