ஊட்டியில் பயணிகளிடம்போக்குவரத்து கழகம் டிக்கெட்கொள்ளை |Fee for fake ticket listing |TNSTC|Ooty
தமிழகத்திலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் பஸ்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இதனால் இங்கு தனியார் பஸ்கள் இல்லாமல் அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்திய போது மலை பகுதிகளில் 20 சதவீதம் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் சட்ட விரோதமாக போக்குவரத்து கழகம் பயணிகளிடம் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கிறது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி கோடேரி கிராமத்தை சேர்ந்த மனோகரன், சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2019ம் ஆண்டில் பொதுநல வழக்கு தொடுத்தார். விசாரணை நடத்திய நீதிபதி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்து வருகிறது.