உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பாடந்துறை, ஆழவயலில் 7 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை

பாடந்துறை, ஆழவயலில் 7 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை

நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பறிக்கப்பட்டது. கூடலூர் பாடந்துறை - ஆழவயல் சாலை மற்றும் அதனை ஒட்டிய விவசாய நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இரவு 11:00 மணிக்கு மேல் வெள்ளம் படிப்படியாக வடிந்தது. பொதுமக்கள் கூறுகையில், சாதாரண மழைக்கே தெருக்கள், சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பாடந்துறை - ஆழவயல் சாலை மற்றும் அதனை ஒட்டிய விவசாய நிலங்களில் மழை பெய்யும் போதெல்லாம் வெள்ளம் தேங்குவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து தெருக்கள், சாலைகளில் மழை நீர் தேங்காமல் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ஜூன் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை