/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ வண்ண, வண்ண பூக்கள் அணி வகுத்த பிரமாண்ட மலர் கண்காட்சி | Flower Exhibition
வண்ண, வண்ண பூக்கள் அணி வகுத்த பிரமாண்ட மலர் கண்காட்சி | Flower Exhibition
நீலகிரி மாவட்ட எல்லையான பந்தலூர் அருகே தாளூர் சோதனை சாவடியை ஒட்டி அமைந்துள்ளது கேரளா மாநிலம் வயநாடு. இங்கு அம்பலவயல் என்ற இடத்தில் மண்டல வேளாண் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8 ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மலர் கண்காட்சி கடந்த 10 நாட்களாக நடந்தது. இதில் 80 வகையான ரோஜா, 200 க்கும் மேற்பட்ட வகையான பூக்கள், வண்ண குடைகள் தோரணம், செயற்கை நீருற்று, காய்கறி தோட்டம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்களை சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஜன 21, 2024