உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / இந்திய அணியில் பங்கேற்க இளம் கேப்டன் அஸ்வந்த் விருப்பம் | Foot Ball Match

இந்திய அணியில் பங்கேற்க இளம் கேப்டன் அஸ்வந்த் விருப்பம் | Foot Ball Match

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வநாயகம் - வெண்ணிலா தம்பதி. இவர்களது மகன் அஸ்வந்த் வயது 17. இவர் எருமாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கிறார். எருமாடு பகுதி என்றாலே கால்பந்து வீரர்கள் நிறைந்த கால்பந்து கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 7 வயது சிறுவனாக இருந்த அஸ்வந்த் கால்பந்து விளையாட்டில் தனது ஆர்வத்தை பெற்றோரிடம் கூறினார். அதைத் தொடர்ந்து அவரது தந்தை வீட்டிற்கு அருகே கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சுள்ளியோடு என்ற இடத்தில் உள்ள காந்திஸ்மாரகா என்ற கால்பந்து பயிற்சி குழுவிடம் பயிற்சி பெற அஸ்வந்தை அனுப்பினார். அங்கு பயிற்சி பெற்ற அஸ்வந்த் பள்ளி, தாலுகா மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கால்பந்து போட்டிகளில் பங்கேற்று தனது முத்திரையை பதித்து வந்தார். அதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளா அளவில் நடைபெறும் லீக் போட்டிகள் மற்றும் முதல்வர் கோப்பைக்கான  போட்டிகளில் பங்கேற்று விளையாடி பரிசுகளை அள்ளி வந்தார். தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பாக சில நாட்களுக்கு முன் அந்தமான் நிக்கோபார் தீவில் நடந்த கால்பந்து போட்டியில் தமிழக குழுவில் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  அங்குள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியில் அஸ்வந்த் தமிழக அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு விளையாடினார். இந்த போட்டியில் பரிசு பெறா விட்டாலும்,  இந்திய அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில், தமிழக அணியின் கேப்டனாக பங்கேற்று இவர் விளையாடியது பந்தலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது மட்டுமின்றி இந்தியாவிற்கான கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடி வெற்றி கோப்பை பெற வேண்டும் என்பதே இளம் கால்பந்து வீரர் அஸ்வந்த் மற்றும் பெற்றோரின் விருப்பமாக உள்ளது. அஸ்வந்த முயற்சிக்கு தமிழக விளையாட்டு துறை உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை