உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நல்ல சாலையை அகற்றி விட்டு சிமென்ட் சாலை அமைக்க எதிர்ப்பு | Gram Sabha Meeting

நல்ல சாலையை அகற்றி விட்டு சிமென்ட் சாலை அமைக்க எதிர்ப்பு | Gram Sabha Meeting

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு ட்பட்ட குந்தலாடி பகுதியில் கிராம சபா கூட்டம் தலைவர் டெர்மிளா தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். அரசு திட்டங்களை பெற்று தருவதாக கூறி சில கவுன்சிலர்கள் பணம் வாங்குவதாகவும், தனி நபர்கள் பய பெறும் இடங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தினர். மேலும் காமராஜர் நகர் பகுதியில் நல்ல நிலையில் உள்ள தார் சாலையை அகற்றி, சிமென்ட் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் நெலக்கோட்டை அருகே அவுண்டேல் கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக போராடியும் நிதி இல்லை என்ற காரணத்தை கூறி ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க முன் வரவில்லை என கிராம மக்கள் குமுறினர். பொதுமக்களிடம் பிச்சை எடுத்து அந்த நிதியை ஊராட்சி நிர்வாகத்தில் வழங்கி சாலையை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். ஆனால் அப்படி ஒரு சாலையே இல்லை என ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மறுத்தது. அத்துடன் இந்த பகுதி தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி என ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு வருவாய் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை அமைந்துள்ள பகுதி நெலக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியாக உள்ளதால் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். கூட்டத்திற்கு கலெக்டர் வர வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் கையில் துண்டு பிரசுரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜன 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை