உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தங்கம் வெல்வதே லட்சியம் என சூளுரை| Hockey| Bronze medal| Junior World Cup hockey

தங்கம் வெல்வதே லட்சியம் என சூளுரை| Hockey| Bronze medal| Junior World Cup hockey

தங்கம் வெல்வதே லட்சியம் என சூளுரை| Hockey | Bronze medal| Junior World Cup hockey| coonoor நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக். கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணி வீடியோ அனலிஸ்டாக பணியாற்றி வருகிறார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம், காமன்வெல்த் போட்டியில் சில்வர், ஏசியன் போட்டியில் தங்கம் வென்ற அணிகளுடன் அசோக் பணியாற்றியுள்ளார். சென்னையில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற்ற உலக ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்று அசத்தினர். அதில் அசோக் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி முக்கிய பங்கு வகித்தார். வெற்றியை கொண்டாடும் விதமாக ஹாக்கி நீலகிரிஸ் அமைப்பு சார்பில் குன்னூரில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது . நிர்வாகிகள் மற்றும் ஹாக்கி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி