உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி சார்பில் குதிரை சாகசப் போட்டி - 2025

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி சார்பில் குதிரை சாகசப் போட்டி - 2025

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி சார்பில் குதிரை சாகசப் போட்டி - 2025 / Horse Racing 2025 / Wellington Military Training College / coonoor / Nilgris நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இளம் முப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் மவுண்டன் ஜிம்கானா சார்பில், குதிரை சவாரி மற்றும் சாகச போட்டிகள் ஜிம்கானா மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான போட்டி கோலாகலமாக துவங்கியது. இதில் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். ராணுவ வீரர்கள் பாரம்பரிய உடை அணிந்து தேசியக்கொடி மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி கொடிகளை ஏந்தி குதிரைகளில் கம்பீர அணிவகுப்பு நடத்தினர். தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குதிரையேற்றம், ஒட்டப்பந்தயம், 5 ஜம்பிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளுக்கான பரிசளிப்பு மார்ச் 25ம் தேதி நடக்கிறது.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை