உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நீலகிரில் தொடர் மழையால் இடிந்த வீடுகள் | House destroyed by rain | Pandalur

நீலகிரில் தொடர் மழையால் இடிந்த வீடுகள் | House destroyed by rain | Pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தோட்டங்கள், சாலைகள் மற்றும் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை என்ற பகுதியில் சாலையோரம் தாழ்வான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பருவமழையின் போது மண் சரிவு ஏற்பட்டு குடியிருப்புகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதியில் பெய்த கன மழையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளின் முன்புறம் மற்றும் பின்புறம் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கி நிற்கிறது. பல வீடுகள் மண் சரிவால் விரிசலடைந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி மக்கள் அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். பத்து வீடுகளைச் சேர்ந்த 62 பேர் தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேரின் வீடுகள் முழுமையாக இடிந்து விழும் நிலையில் அந்தரத்தில் தொங்கி நிற்கிறது.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை