உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் | Indipendence Day celebration | Cuddalo

தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் | Indipendence Day celebration | Cuddalo

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் வளர்ப்பு யானைகள் வரிசையாக அணி வகுத்து நிற்க அதன் மீது பாகன்கள் தேசியக் கொடியை ஏந்தி அமர்ந்திருந்தனர். வன ஊழியர்கள் முன்னால் அணிவகுத்து நின்றனர். முதுமலை துணை இயக்குனர் வெங்கடேஷ் பிரபு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்தார். தொடர்ந்து வன ஊழியர்கள் மரியாதை செலுத்த யானைகள் தும்பிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியது. விழாவில் வனச்சரகர்கள் பரத், சிவக்குமார், விஜயன் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை