உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கட்டைக் கொம்பனுக்கு கட்டம் சரியில்லையோ?

கட்டைக் கொம்பனுக்கு கட்டம் சரியில்லையோ?

கட்டைக் கொம்பனுக்கு கட்டம் சரியில்லையோ? | Dance in the Nighy | Day time Sleep | Kattai Komban Elephant | Pandalur | Nilgiris நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனப்பகுதியில் கட்டைக் கொம்பன் என அழைக்கப்படும் ஆண் காட்டு யானை தனியாக உலா வருகிறது. ஏற்கனவே இரவு தோறும் தெனாவெட்டாக ஊருக்குள் உலா வந்த புல்லட் என்ற ஒற்றை யானை வீடுகளின் கதவுகளை அசால்ட்டாக உடைத்து அரிசியை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தது. ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த புல்லட் சமீபத்தில் பிடிக்கப்பட்டு அடர்ந்த வனத்திற்குள் விடப்பட்டது. திருகு வலி போய் முதுகு வலி வந்தது போல் புல்லட் அட்டகாசம் ஓய்ந்த நிலையில் கட்டைக் கொம்பன் அட்டகாசம் தலைதுாக்கி வருகிறது. தனியாக உலா வரும் கட்டைக் கொம்பன் பகலில் குடியிருப்புகளை ஒட்டிய புதர்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் படுத்து ஓய்வு எடுக்கிறது. சரியாக மாலை 6 மணிக்கு மேல் எழுந்து இரவில் சாலை மற்றும் கிராம பகுதிகளில் முகாமிடுகிறது. ஊருக்குள் வரும் யானை விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. குடியிருப்புகள் அருகே முகாமிடுவதால் பகல் மற்றும் இரவு என 24 மணி நேரமும், இந்த யானையை கண்காணிக்க தனி வனக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கட்டைக் கொம்பன் வரவால் இரவு நேரத்தில் வனத்துறையினரும், கிராம மக்களும் உறக்கம் இழந்து தவித்து வருகின்றனர். பகலில் குறட்டை விட்டு உறக்கம் போடும் கட்டைக் கொம்பன், இரவில் கிராமங்களில் ஆட்டம் போடுவதால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டு உள்ளது. கட்டைக் கொம்பனுக்கு கட்டம் சரியில்லை. அவனை விரைவில் பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விடுவோம் என வனத்துறை உறுதியளித்துள்ளது.

ஜூலை 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !