திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | kumbabhishekam | ooty
ஊட்டி காந்தள் பகுதியில் பிரசித்தி பெற்ற மூவுலகரசியம்மன் கோயில் உள்ளது. 500 ஆண்டு பழமையான இக்கோயில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிேஷக பூஜைகள் கடந்த 31ம் தேதி துவங்கியது. யாக வேள்விகளை தொடர்ந்து புனித நீர் நிரம்பிய கடம் கோயிலை சுற்றி வலம் வந்தது. தொடர்ந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பிப் 04, 2025