ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் | Leopard
நீலகிரி மாவட்டம் குன்னூர் இளித்தொரை இந்திரா நகர் பகுதிக்கு ஞாயிறு இரவு வந்த சிறுத்தை நாயை விரட்டியது. அந்த நாய் சிக்காததால் திரும்ப சென்று மற்றொரு வளர்ப்பு நாயை கவ்விச் சென்றது. இக்காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஏற்கனவே இந்த பகுதிக்கு மூன்று முறை சிறுத்தை வந்து சென்றது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வாரம் இங்கு இரவில் காரை நிறுத்தி விட்டு டிரைவர் வெளியே வந்த போது சிறுத்தை விரட்டியது. சிறுத்தையிடம் பிடிபடாமல் டிரைவர் தப்பி ஓடி உயிர் பிழைத்தார். ஏற்கனவே பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி பெண் மற்றும் குழந்தை இறந்த சம்பவம் மக்களிடைய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் சிறுத்தை தாக்கும் பீதியில் மக்கள் உள்ளனர்.