உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நுாலக புரவலர்களுக்கு வரவேற்பு | Library Opening Ceremony

நுாலக புரவலர்களுக்கு வரவேற்பு | Library Opening Ceremony

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் பகுதி நேர நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. வாசகர் வட்ட நிர்வாகி அசைன் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் சிவகாமி, துணைத் தலைவர் நாகராஜன், கவுன்சிலர்கள் சேகர், ஆலன், சூரிய கலா ஆகியோர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா வாசகர்களுக்கு, புத்தகங்களை வழங்கி நூலக செயல்பாட்டை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆசிரியர் கருணாநிதி தனது சொந்த செலவில் 4000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை நுாலகத்திற்கு வழங்கினார். தேவாலா, பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 33 பேர் நூலக புரவலர்களாக இணைந்தனர். புரவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் நூலகம் கோரி விண்ணப்பித்த கார்த்திக் கௌரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களுக்கு வாசக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. செம்மொழி அகாடமி சார்பில் நூலக வளர்ச்சிக்கு நிதி வழங்கப்பட்டது. விழாவில் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நூலகர் நித்திய கல்யாணி நன்றி கூறினார்.

பிப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !