உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தந்தங்கள் அகற்றப்பட்டு உடலை புதைக்க வனத்துறை ஏற்பாடு | Male elephant dead | Mettupalayam

தந்தங்கள் அகற்றப்பட்டு உடலை புதைக்க வனத்துறை ஏற்பாடு | Male elephant dead | Mettupalayam

தந்தங்கள் அகற்றப்பட்டு உடலை புதைக்க வனத்துறை ஏற்பாடு / Male elephant dead / Mettupalayam கோவை மேட்டுப்பாளையம் கூத்தாமண்டி பகுதியில் ஆண் காட்டு யானை வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமல் சோர்வடைந்தது. வனத்துறையினர் மற்றும் வெட்டினரி டாக்டர்கள் கடந்த ஒரு வாரமாக யானைக்கு சிகிச்சை அளித்தனர். யானையின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என வெட்டினரி டாக்டர்கள் கூறினர். காட்டு யானைக்கு முலாம்பழம், தர்பூசணி, வாழை உள்ளிட்ட சத்தான உணவு கொடுத்தனர். வலி நிவாரணி, ஊட்டச்சத்து மாத்திரை மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வெல்லம் கலந்த அரிசியில் கொடுத்தனர். சோர்வு நீங்கினாலும், வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக யானையால் நடக்க முடியவில்லை. உடல் சூட்டை குறைக்க யானை மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிக்க வைத்தனர். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த யானை இன்று காலை உயிரிழந்தது. வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வெட்டினரி டாக்டர்கள் உடற்கூறாய்வு செய்தனர். இறந்த காட்டு யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. யானையை தந்தத்துடன் புதைத்தால் தந்தங்களை வன விலங்கு வேட்டை கும்பல் திருடும் வாய்ப்புள்ளது. தந்தம் தீயில் எரியாது. தீயிட்டு அழிக்க முடியாது. இதனால் அகற்றப்படும் தந்தங்கள் மாவட்ட வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும். தந்தங்கள் பதப்படுத்தப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என வனத்துறை தெரிவித்தது.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ