உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கூடலுார் காட்டில் ஆட்டம் போட்ட ஆட்கொல்லி புலி

கூடலுார் காட்டில் ஆட்டம் போட்ட ஆட்கொல்லி புலி

கூடலுார் காட்டில் ஆட்டம் போட்ட ஆட்கொல்லி புலி | Where is the Man-Eating Tiger? | Gudalur Forest Department | Gudalur | Nilgirs நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே லாரஸ்டன் பகுதியில் இரண்டு பேரை வேட்டையாடி ரசித்து ருசித்த ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி எடுத்தது. இதற்காக கடந்த 21ம் தேதி முதல் புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் கூடலூர் வன அலுவலர் தேவராஜ் தலைமையில் 100 க்கும் மேற்பட வன ஊழியர்கள் ஈடுபட்டனர். 13 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது. ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சில்வர் கிளவுட் வன சோதனை சாவடி அருகே தனியார் எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் இன்று அதிகாலை புலி சிக்கியுள்ளது. புலியை மற்றொரு கூண்டுக்கு மாற்றி முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர். வன அலுவலர் தேவராஜ் கூறுகையில், கூண்டில் சிக்கிய புலி மருத்துவ பரிசோதனைக்காக முதுமலை எடுத்து செல்லப்படுகிறது. உயர் அதிகாரிகள் உத்தரவுபடி அடுத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார். ஆட்கொல்லி புலி சிக்கியதால் கூடலுார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

செப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ