உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / 224 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| ADMK| sports | Marathon| Coonoor

224 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| ADMK| sports | Marathon| Coonoor

டைட்டில்: 224 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு| ADMK| sports | Marathon| Coonoor மறைந்த முன்னாள் முதல்வர்கள் M.G.R., ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பிறந்தநாளை அதிமுகவினர் முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன் பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காட்டில் மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை முன்னாள் MLA சாந்தி ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார். 2 கிலோ மீட்டர் முதல் 5 கிலோமீட்டர் வரை 4 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 224 ஆர்வமுடன் பங்கேற்றனர். வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சிறு குழந்தை முதல் சீனியர் சிட்டிசன் வரை அனைவரும் போட்டியில் கலந்து கொண்டனர். அருவங்காடு முதல் பாலாஜி நகர், ஜெகதளா, உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக பிரிவுகளுக்கு ஏற்ப மாரத்தான் நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு மெடல், ஷீல்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசுகளை அதிமுக மாவட்ட செயலாளர் வினோத் வழங்கினார். ஏற்பாடுகளை ஜெகதளா அதிமுக கிளை செயலாளர் சஜீ உள்ளிட்டோர் செய்தனர்.

பிப் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி