குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்
குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்| Marathon | sports | Madras regiment| Coonoor நீலகிரி குன்னூர் வெலிங்டனில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் உள்ளது. ரெஜிமெண்ட் சென்டர் சார்பில் மூன்றாவது அறை மாரத்தான் போட்டி நடத்தினர். வலுவான உடல், வலிமையான மனம் மற்றும் வலிமையான தேசம் குறித்து மாரத்தானில் வலியுறுத்தப்பட்டது. ஒன்றாக போடுவோம் என்ற themeல் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமெண்ட் கிரிகேடியர் கிருஷ்ணநேந்துதாஸ் கொடியசைத்து மராத்தானை துவக்கி வைத்தார். 21 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 1200 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு ஷீல்டு, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசுகளை எம் ஆர் சி கமெண்டன்ட் கிருஷ்ணனேந்துதாஸ் மற்றும் ராணுவ மகளிர் நல சங்கத் தலைவர் தனுஸ்ரீ இணைந்து வழங்கினர். முன்னதாக zumba நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.