உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது| Mariamman Temple consecration| Ooty

வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது| Mariamman Temple consecration| Ooty

வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது| Mariamman Temple consecration| Ooty ஊட்டி மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று மகா கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து மகா சங்கல்பம், புண்யாகவச்சனம், வாஸ்து சாந்தி, புஷ்ப பாண்ட பூஜை மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றது. பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமையில் இன்று காலை வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிேஷகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன் குழுவினர் செய்தனர்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ