உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / உணவு பாதுகாப்பு துறை விசாரணை | In Aavin milk Floating worms

உணவு பாதுகாப்பு துறை விசாரணை | In Aavin milk Floating worms

நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் உழவர் சந்தை அருகேயுள்ள ஆவின் பூத்தில் இருந்து பால் பாக்கெட் வாங்கி உள்ளார். கடைக்கு வந்து பாலை சூடு செய்ய பாத்திரத்தில் ஊற்றினார். பால் முழுதும் வெள்ளை புழுக்கள் மிதந்ததைப் பார்த்து திடுக்கிட்டார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த அதிகாரி பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு செய்தார். ஆவின் பால் பாக்கெட்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். காலாவதியான பால் சப்ளை செய்தனரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

மார் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை