உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஹாரன் எழுப்பி காட்டெருமைகள் விரட்டியடிப்பு | Ooty Train | Buffaloes Blockade

ஹாரன் எழுப்பி காட்டெருமைகள் விரட்டியடிப்பு | Ooty Train | Buffaloes Blockade

மேட்டுப்பாளையம் டு குன்னுார் இடையே ஊட்டி மலை ரயில் 200 சுற்றுலா பயணிகளுடன் இன்று காலை வந்து கொண்டிருந்தது. மரப்பாலம் அருகே வந்தபோது இரண்டு காட்டெருமைகள் ரயிலுக்கு வழி விடாமல் தண்டவாளம் வழியாக சென்றன. ரயிலை நிறுத்தி ஹாரன் அடித்து டிரைவர் மற்றும் ஊழியர்கள் காட்டெருமைகளை விரட்ட முயன்றனர். எனினும் தண்டவாளத்தை விட்டு நகர மறுத்த காட்டெருமைகளை விரட்ட ஹாரன் சத்தம் எழுப்பியவாறு பின்தொடர்ந்து ரயில் சென்றது. 400 மீட்டர் தூரம் வரை தண்டவாளத்திலேயே சென்ற காட்டெருமைகள் பிறகு வனப்பகுதிக்குள் ஓடிய மறைந்தது. இதனால் மலை ரயிலில் பத்து நிமிடம் கால தாமதம் ஏற்பட்டது.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ