உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பழிவாங்கப்பட்டதாக தலைவர் சிவகாமி குமுறல் | bribe case | Nellialam Municipal Chairman | Pandalur

பழிவாங்கப்பட்டதாக தலைவர் சிவகாமி குமுறல் | bribe case | Nellialam Municipal Chairman | Pandalur

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியின் பொது நிதி மூலம் 21 வேலைகளுக்கான டெண்டர் விடப்பட்டது. இதற்கு நகராட்சி தலைவர் சிவகாமி ஒப்பந்தாரர்களிடம் தலா 8 சதவீதம் கமிஷன் கேட்டதாக புகார் எழுந்தது. தொடர்ந்து பணிகளை பெற்ற ஒப்பந்ததாரர்கள் 11 பேர் நகராட்சி தலைவர் சிவகாமியிடம் கமிஷன் பணத்தை கொடுத்துள்ளனர். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி..எஸ்.பி. ஜெயக்குமார், எஸ்ஐ சத்தியபிரியா, தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது தலைவர் சிவகாமியின் அறையின் மேஜையில் கணக்கில் வராத மற்றும் ஒப்பந்ததாரர்களிடம்  கமிஷனாக பெற்ற மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி