/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ தமிழக - கர்நாடக மாநில எல்லைகளில் போலீஸ் தீவிர கண்காணிப்பு | Action against drug smuggling|Cuddalore
தமிழக - கர்நாடக மாநில எல்லைகளில் போலீஸ் தீவிர கண்காணிப்பு | Action against drug smuggling|Cuddalore
தமிழக - கர்நாடக மாநில எல்லையான நீலகிரி மாவட்டம் கக்கநல்லா சோதனை சாவடி வழியாக நீலகிரி மற்றும் கேரளாவுக்கு கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறது. கடத்தலில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து, போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி. சௌந்தர்ராஜன், கூடலூர் டி.எஸ்.பி. வசந்த்குமார், மசினகுடி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் மோப்ப நாய் மோக்கா உதவியுடன், கக்கநல்லா சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நவ 03, 2024