பால்குடம் சுமந்து பக்தர்கள் பரவசம் | Temple Festival || coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் - ஊட்டி சாலையில் அமைந்துள்ள வெலிங்டன் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி ஹரி குருசாமி தலைமையிலான ஐயப்ப பக்தர் குழுவினரின் பாலபிஷேகம் நடந்தது. இதில் பகவதி சன்னதியின் முன்பு விளக்கேற்றி வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலை சுற்றி சரண கோஷம் முழுங்க பால் குடம் மற்றும் புஷ்ப ஊர்வலம் நடந்தது. ஐயப்பனுக்கு பாலபிஷேகம், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 26ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. 2025 ஜனவரி 14ம் தேதி மகரஜோதி சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை வெலிங்டன் ஐயப்பன் கோயில் பொதுச் செயலாளர் முரளிதரன் தலைமையில் ஐயப்ப பக்த குழுவினர் செய்தனர்.
டிச 16, 2024