/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ நீலகிரியில் இயக்கப்படும் டப்பா பஸ்களால் திக்திக் பயணம் | Bus accident|42 passengers injured|coonoor
நீலகிரியில் இயக்கப்படும் டப்பா பஸ்களால் திக்திக் பயணம் | Bus accident|42 passengers injured|coonoor
நீலகிரி மாவட்டம் உட்லேண்டஸ் பகுதியில் இருந்து குன்னுாருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இன்று மதியம் காட்டேரியில் சில பயணிகளை ஏற்றி மொத்தம் 55 பயணிகளுடன் குன்னூருக்கு புறப்பட்டது. 100 மீட்டர் தூரம் வருவதற்குள் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வலதுபுறம் நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி இரும்பு தூணில் மோதியது. இதில் டிரைவர் மனோஜ் வயது 50 உட்பட 42 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஸ்பாட்டிற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை அவ்வழியாக வந்த வாகனங்கள், காட்டேரியை சேர்ந்த ஆட்டோக்கள் மற்றும் 108 ஆம்புலென்ஸ்களில் ஏற்றி குன்னூர் அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஜன 27, 2025