/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ பாரம்பரிய உடையுடன் நடனமாடிய படுகரின மக்கள் | Padukhar traditional dance | Ooty
பாரம்பரிய உடையுடன் நடனமாடிய படுகரின மக்கள் | Padukhar traditional dance | Ooty
நீலகிரி மாவட்டத்தில் 350 க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை தொன்று தொட்டு இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஊட்டி அருகே உள்ள எப்பநாடு கிராமத்தில் உள்ள பீரமுக்கு ஈஸ்வரன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது . மலை உச்சியில் உள்ள இக்கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழாவில் எப்பநாடு, தொறைஹட்டி, துனேரி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைகோயிலில் கூடி வரிசையில் நின்று ஈஸ்வரன் சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஜன 28, 2025