உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / செப்டம்பர் 8 ம் தேதி தேர்த்திருவிழா | Nilgiris | Arogya Anai flag hoisting

செப்டம்பர் 8 ம் தேதி தேர்த்திருவிழா | Nilgiris | Arogya Anai flag hoisting

நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ் கம்பெனி ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மாதா திருஉருவம் பொறித்த கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் புனிதம் செய்து கொடியேற்றினார். தொடர்ந்து ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. மாதா பாடல்கள் பாடப்பட்டது. நீலகிரியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் திருப்பலி நடைபெற்றது. தினமும் நவநாள் திருப்பலி, ஜெபங்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக செப்டம்பர் 8ம் தேதி தேர்த்திருவிழா, ஆடம்பர திருப்பலிநடைபெற உள்ளது. புதிதாக 7 அடி மாதா சிலை மாதா கிணறு அருகே நிறுவப்பட உள்ளதால் கிறிஸ்தவர்கள் பங்கேற்குமாறு பங்குதந்தை ஆரோக்கியராஜ் அழைப்பு விடுத்தார்

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை