உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ராணுவ இசையுடன் துப்பாக்கி ஏந்தி ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர் | Nilgiris | Commander Bipin Rawa

ராணுவ இசையுடன் துப்பாக்கி ஏந்தி ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர் | Nilgiris | Commander Bipin Rawa

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு கடந்த 2021 டிசம்பர் 8 ம் தேதி முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாராவத் உள்ளிட்ட 14 பேர் இறந்தனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள நினைவு தூணில் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த 14 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராணுவ இசையுடன் துப்பாக்கி ஏந்தி ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி