சேரங்கோட்டில் 126 மில்லிமீட்டர் மழை பதிவு | Nilgiris | Landslide in Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இரவு சேரங்கோடு பகுதியில் 126 மில்லிமீட்டர், பந்தலூரில் 104 மில்லி மீட்டர் மழை பதிவானது. நீரோடைகள் மற்றும் சதுப்பு நில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேரம்பாடி , திருவள்ளுவர் நகரில் மண் சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்தது. நடைபாதைகளும் பெயர்ந்தன. மண் சரிவு ஏற்படும் வகையில், விரிசல் ஏற்பட்டு வருவதால் கிராமத்தில் உள்ள 13 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் வீடுகளை காலி செய்து, சேரம்பாடி அரசு பள்ளியில் வருவாய் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்கினர். ஆண்டுதோறும் பருவமழையின் போது இந்த பகுதியில், மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு வருவதால் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி குடியிருப்புகள் கட்டி தரவேண்டும் என பகுதி மக்கள் வலியுறுத்தினர்.