வாகனங்களில் செல்வோருக்கு எச்சரிக்கை | Nilgiris| Cyclone in Coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குன்னூர் பகுதியில் 25 மரங்கள் சூறாவளி காற்றால் சாய்ந்தன. தீயணைப்புத் துறையினர் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர். பேரட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் ஊராட்சி சார்பில் அமைத்த மேற்கூரைகள் காற்றில் பறந்து அருகே உள்ள தோட்டங்களில் விழுந்தன. இதில் கூரையின் அடியில் கான்கிரிட் தளத்தில் சில இடங்களில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 22, 2024